வானதி சீனிவாசனின் எம்.எல்.ஏ எழுதிய தடையொன்றுமில்லை ஒரு கிராமத்து சிறுமி அரசியல்வாதியான கதை: மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி வெளியீட்டார்!!!*

*வானதி சீனிவாசனின் எம்.எல்.ஏ எழுதிய தடையொன்றுமில்லை ஒரு கிராமத்து சிறுமி அரசியல்வாதியான கதை: மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி வெளியீட்டார்!!!*

கோவை சித்ரா அருகே அமைந்துள்ள தனியார் ஜி.ஆர்.டி ஆடிட்டோரியம் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் எழுதிய தடையொன்றுமில்லை புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் (பெண்கள் மற்றும் நலத் துறை) கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் பா.ஜ.க நிர்வாகிகள் எச்.இராஜா, பொன். இராதாகிருஷ்ணன், எஸ்.ஆர்.சேகர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

*மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசியதாவது* :-

வானதியை ஒரு பெண் சிங்கம் எனவும் ஒரு தொலைக் காட்சி மேடையில் கமலுடன் தனது விவாதத்தை நினைவு கூர்ந்து கமல்ஹாசனை தோற்கடித்ததற்காக வானதியை நான் பெண் சிங்கம் என்று அழைக்கவில்லை. ஏனென்றால், தொலைக் காட்சி விவாதத்தில் எளிதில் தோற்கடிக்கப்படும் ஒருவர் தேர்தல் போரில் அதிக சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும். தடையொன்றுமில்லை பக்கங்களில், இளம் வானதி கண்டு பிடிக்கப்படுவதைக் காணலாம். தனக்காக எழுந்து நிற்கும் நெருப்பு.” வானதி ஒரு கிராமத்தில் குழந்தையாக வளர்ந்த போது எதிர்கொண்ட போராட்டங்கள் மற்றும் தோல்விகளை வெற்றியின் படிக் கட்டுகளாகப் பயன்படுத்தியதைப் பற்றி சொல்லும் இந்த புத்தகத்தை பாராட்டினார். பெண்கள் தாங்கள் கல்வி கற்கும் போது எந்த தொழிலை மேற்கொள்ள வேண்டும் அல்லது இல்லத்தரசிகளாக இருக்க வேண்டும் என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், “பெண்களுக்கு எப்படி அதிகாரம் அளிப்பது, பெண்களுக்கு எப்படி அதிகாரம் அளிப்பது என்று மக்கள் அடிக்கடி பேசுகிறார்கள். ஆனால், பெண்மையை நாம் பலருக்கு மறுவரையறை செய்ய வேண்டும். ஒரு பெண் பிறக்கும் போது, ​​அவளைப் படிக்க வைக்க விரும்பும் குடும்பத்தின் அன்பால் அவள் ஆசீர்வதிக்கப்படட்டும். பெண் குழந்தை பருவத்தில் நம்மை பார்த்துக் கொள்வது போன்று மேலும், அவள் வயதாகும் போது பார்த்துக் கொள்ள வேண்டும், பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மகளாக, மனைவியாக, தாயாக மதிக்கப்பட வேண்டும் என்று கூறிய அமைச்சர், இந்த ஆசீர்வாதங்களுடன் அவர்கள் தங்கள் வாழ்க்கையை அதிகாரத்துடன் வாழ்வார்கள் என்றும் கூறினார்.

*பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் எச்.இராஜா பேசியதாவது* :-

வானதி சீனிவாசனை 30 ஆண்டுகளுக்கு மேலாக தெரியும். பா.ஜ.க வில் பெண்களுக்கு எப்போதும் ஒரு பங்கு உண்டு. பா.ஜ.க வில் சமுகநீதி உண்மையில் உள்ளது. மற்ற கட்சிகள் இப்போது தான் பேசி கொண்டு இருக்கிறார்கள். தமிழக மக்களிடம் பா.ஜ.க தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பா.ஜ.க விற்கு தடையென்றுமில்லை

கோவை மக்களுக்கு பா.ஜ.க வின் மீது ஈர்ப்பு உள்ளது. இளைஞர்களுக்கு புத்தகம் படிப்பது இல்லை, மீம்ஸ்களை படித்து பேசும் அளவிற்கு இளைஞர்கள் இப்போது இருக்கின்றனர். புத்தகங்களை திருமணங்களில் பரிசாக கொடுங்கள் என்றார்.

*முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் பேசியதாவது* :-

புத்தகத்தின் தலைப்பு தடையென்றுமில்லை, ஆனால் வானதி முழுக்க முழுக்க தடைகளை தாண்டி வந்தவர். வானதியிடம் முக்கியமான குணம் பிடிவாதம். ஸ்மிரிதி இராணியும் பிடிவாதம் பிடித்தவர் தான். அவரும் தேர்தலில் தோற்றவர் , தோற்றவரை தோற்கடிக்கமால் விடமாட்டார். கமல்ஹாசனை வானதி தோற்கடித்தார், ஸ்மிருதி இராணி கமல்ஹாசனை தொலைக்காட்சி விவாதத்தில் கதறவிட்டவர் என்றார்.

*பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பேசியதாவது*

அரசியலில் சாதிக்க என் பெற்றோரும் , கணவரும் , மகன்களும் முக்கிய காரணம் எனவும், என்னை நல்வழி படுத்திய முக்கிய தலைவர்கள் மேடையில் அமர்ந்துள்ளார்கள். இது சுயசரிதை கிடையாது என்னுடைய அனுபவங்களை புத்தகங்களில் வெளியிட்டு உள்ளோம். வீட்டில் உள்ள பெண்களும் அரசியலில் சாதிக்க முடியும் என்றால் நாம் அதற்கான நேரத்தை அவர்களுக்கு ஒதுக்க வேண்டும். பா.ஜ.க பல்வேறு வாய்ப்புகளும், பொருப்புகளும் எனக்கு கொடுத்து உள்ளது. கொடுத்தும் வருகிறது. பா.ஜ.க வில் உழைக்கும் ஒவ்வொருவர்களையும் தலைமை கூர்ந்து கவனித்து வரும் என்றார். அதற்கு நான் தான் எடுத்துக்காட்டு என்றார். பதவி, பொறுப்பு என்பதை தலைக்கு ஏற்றாமல் மக்களுக்கு பணி செய்ய வேண்டும் எனவும் பிரதமர் மோடி தான் ரோல்மாடல் என்றார். பல பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பெரிய உயரங்களை அடைய ஊக்குவிப்பதற்காக இந்த புத்தகத்தை எழுதியதாக கூறினார்.