ஹோட்டல் ஊழியரை மிரட்டி நகை பறிப்பு : இருவர் கைது

ஹோட்டல் ஊழியரை மிரட்டி நகை பறிப்பு : இருவர் கைது

கோவை காந்திபுரம் அடுத்த ராம் நகர் பகுதியில் பார்ச்சூன் ஹோட்டல் செயல்பட்டு வருகிறத .இந்த ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்களுக்காக அதே பகுதியில் வீடு ஒன்று வாடகைக்கு எடுக்கப்பட்டு அங்கு ஊழியர்கள் தங்கி இருந்து பணிபுரிந்து வருகின்றனர் .இந்த ஹோட்டலில் திருநெல்வேலியை சேர்ந்த நாராயண பெருமாள், சாத்தான்குளத்தைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் குன்னத்தூர் சார்ந்த ஷாலின் ஆகியோர் தங்கியிருந்தனர் .இதில் திருநெல்வேலியை சேர்ந்த நாராயண பெருமாள் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் அறையில் தங்கி இருந்தவர்களிடமிருந்து பொருட்களை திருடி அதன் மூலம் மது அருந்திவிட்டு ஜாலியாக ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஹோட்டல் நிர்வாகத்தினர் நாராயண பெருமாளை வேலையில் இருந்து நீக்கினர் .ஆனால் அவர் சொந்த ஊருக்கு செல்லாமல் அறையிலேயே தங்கி இருந்துள்ளார். இதற்கிடையே ஹோட்டலில் பணிபுரிந்த சாத்தான்குளத்தைச் சேர்ந்த அஜித்குமார் தான் வேலைக்கு வரவில்லை சொந்த ஊருக்கு செல்கிறேன் என கூறிவிட்டு வேலையில் இருந்து நின்று விட்டார். ஆனால் நாராயண பெருமாளும், அஜித்குமாரும் சொந்த ஊருக்கு செல்லாமல் அறையிலேயே தங்கி இருந்துள்ளனர் .கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை முடிந்து வந்த ஷாலினிடம் வேலையில் இருந்து நிறுத்தப்பட்ட நாராயண பெருமாள் பணம் வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் ஷாலின் தன்னிடம் பணம் இல்லை என கூறியிருக்கிறார் .இதனால் ஆத்திரமடைந்த நாராயண பெருமாள் பீர் பாட்டிலை உடைத்து ஷாலின் கழுத்தில் வைத்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அவர் அணிந்திருந்த செயின், மோதிரம் மற்றும் விலை உயர்ந்த ஆப்பிள் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டார். இந்த சம்பவம் நடந்தது குறித்து ஷாலின் யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இதற்கிடையே தனது செல்போன் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டதாக அறையில் தங்கியிருக்கும் மற்றொரு நபரான பால தினேஷிடம் ஷாலில் கூறியுள்ளார். இதுகுறித்து பால தினேஷ் நகை மற்றும் செல்போனை எதற்காக பறித்து வைத்துள்ளீர்கள் என்று நாராயண பெருமாள் மற்றும் அஜித்குமாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார் மேலும் பொருள்களை திருப்பி கொடுத்து விடுமுறை எச்சரித்துள்ளார். இந்த விஷயம் ஹோட்டல் மேனேஜர் தேவராஜூலுக்கு தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் ஹோட்டல் மேனேஜர் தேவராஜூலு காந்திபுரம் மார்க்கெட்டில் இருந்து ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது செங்குப்தா வீதி அருகே நாராயண பெருமாளும் அஜித்குமாரும் நின்று கொண்டு இருந்தன.ர் அவர்களைப் பார்த்த தேவராஜூலு எதற்காக ஷாலினிடமிருந்து நகை செல்போனை பறித்து வைத்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் உதவியுடன் தேவராஜுலு அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். தொடர்ந்து தேவராஜுலு இது குறித்து புகார் அளித்தார்.தொடர்ந்து போலீசார் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் நாராயண பெருமாள்( 24 )மற்றும் சாத்தான்குளத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் அஜித்குமார் (25 )ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து தங்க நகைகளை பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர.