கோவை: பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நேற்று கோவை ரயில் நிலையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்ட் பக்கம் பெண் ஒருவர் ஏராளமான மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்தார் .
அவர் வைத்திருந்த முட்டைகளை சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசி மூட்டைகளை ரயில் மூலம் கேரளாவுக்கு கடத்த கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கீதா (வயது 50) என்பது தெரியவந்தது. ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்..
Leave a Reply