கோவை விமான நிலையத்தில் ஐ.டி ஊழியரின் நகைகள் திருட்டு

கோவையில் விமான நிலையத்தில் ஐ.டி ஊழியரின் நகைகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆதித்யா திவாரி (வயது 30) இவர் சரவணம்பட்டி கீரணத்தம் பகுதியில் தங்கியிருந்த ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கோவையில் இருந்து டெல்லிக்கு செல்வதற்காக புறப்பட்டார். அவர் வைத்திருந்த கைப்பையில் தங்க 5 பவுன் வளையல், அரைப்பவுன் டாலர், அரைப்பவுன் கம்மல் மற்றும் வெள்ளிப்பொருட்கள் என மொத்தம் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை வைத்து இருந்தார். விமான நிலையத்தில் அவரது பையை சோதனை செய்த ஊழியர்கள் அதனை சீல் செய்து அனுப்பினர். டெல்லி சென்றதும் பையை திறந்து பார்த்தபோது அதில் இருந்த நகைகள் மாயமாகி இருந்தது. இதுகுறித்து ஆதித்யா திவாரி பீளமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோவை விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் யாரேனும் நகைகளை திருடினார்களா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.