கோவை ஜூலை 5சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் முகேஷ் குமார் புரோகித் .இவர் கோவை ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார் .அதில் அவர் கூறியிருப்பதாவது கடந்த 12 -6 -20 22 அன்று கோவை நீலாம்பூர் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் ராஜகுரு என்பவரை சந்தித்தேன். அவர் தன்னை ஐ.பி.எஸ் .அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டார் .மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் காபி- ரெஸ்டாரண்ட் அமைப்பதற்கு அனுமதி வாங்கி தருவதாக கூறினார் .இதை நம்பி நான் அவரிடம் முதலில் ரூ 1 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தேன். பின்னர் 13- 6- 20 22 அன்று ரேஸ்கோர்சில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வரச்சொன்னார் .அங்கு வைத்து,அவருக்கு ஓட்டலில் தங்கும் வாடகை, விமான டிக்கெட், இதர செலவுக்காக ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தேன். அவர் கூறியபடி தனக்கு கலெக்டர் அலுவலகங்களில் காபி – ரெஸ்டாரென்ட் நடத்துவதற்கு அனுமதி வாங்கி கொடுக்கவில்லை .என்னை மோசடி செய்து விட்டார் .இவ்வாறு அதில் கூறியுள்ளார.இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா சிறப்பு இன்ஸ்பெக்டர் ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் ராஜகுரு மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
Leave a Reply