கோவை கிறிஸ்தவ ஆலய மேலாளரை தாக்கி கொலை மிரட்டல்-இன்ஜினியர் உள்பட 4 பேர் மீது புகார்.!!

கோவை ராமநாதபுரம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் விக்டர் செல்வகுமார் (வயது 54) இவர் கோவை ராஜ வீதியில் உள்ள டி. இ .எல் .சி. சர்ச் மேனேஜராக உள்ளார்.சம்பவத்தன்று சர்ச் வளாகத்தில் என்ஜினியர் முரளி என்பவர் வீடு கட்டுவதற்கான மூலப் பொருட்களை அனுமதி பெறாமல் இறக்கினார்.இதை விக்டர் செல்வகுமார் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த முரளி ,கமலா ,ராஜ்குமார், ஜெயராஜ் ஆகியோர் சேர்ந்து விக்டர் செல்வகுமாரை தாக்கி, கொலை மிரட்டல், விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விக்டர் செல்வகுமார் உக்கடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இன்ஜினியர் முரளி கமலா ராஜ்குமார், ஜெயராஜ், ஆகியோர் மீது கொலை மிரட்டல் ,தாக்குதல் ,பணி செய்ய விடாது தடுத்தல் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.