பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க 24 மணி நேர பொது தொலைபேசி எண் அறிமுகம்.!!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்திட புதிய  YOUR COLLECTOR 8300175888 என்ற எண்ளை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் அறிமுகப்படுத்தி தெரிவிக்கையில்,
இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவித்திட ஏதுவாக வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம்களில் மனுக்களை அளித்து பயன்பெற்று வருகின்றனர்.
அதனை தொடர்ந்து பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது வழங்கப்படும் பதிவுக்கான காலதாமதத்தை குறைத்திடும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரை தளத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையில் CALL YOUR COLLECTOR 8300175888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
அவ்வாறு தெரிவிக்கப்படும் பொதுமக்களின் குறைகளானது சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு மனுதாரருக்கு உரிய பதில் காலதாமதமின்றி கிடைத்திடும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பின் 10889, பேரிடம் மேலாண்மை சார்பில் 1077, சமூக நலன்  மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 181, தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1950 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
எணவே பொதுமக்கள் மேற்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்..