இடைக்கால பட்ஜெட் 2024!! நிதியமைச்சர் உரையின் சிறப்பம்சங்கள்..!!

10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் பல்வேறு சவால்களை சமாளித்து வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது.அனைவருக்கும், அனைத்தும் என்ற இலக்கை நோக்கி பிரதமர் மோடி தலைமையிலான அரசு பயணித்து வருகிறது.அனைத்து குடிமக்களும் பயன்பெறும் வகையில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

 

  • 80 கோடி குடும்பங்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன
  • அடுத்த 5 ஆண்டுகளில் பிரதமர் திட்டத்தின் கீழ் 2 கோடி வீடுகள் கட்டப்படும்
  • மத்திய அரசின் திட்டங்களால் 2 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக ஆகியுள்ளனர். பெண் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை 2 கோடியில் இருந்து 3 கோடியாக உயர்த்த திட்டம்
  • 1 கோடி வீடுகளில் சோலார் பேனல்கள் அமைப்பதன் மூலம் வீடு ஒன்றிற்கு தலா 300 யூனிட் மின்சாரம் கிடைக்கும்
  • சாதி, மத வேறுபாடுகள் இன்றி, திட்டங்களின் பயன்கள் அனைவரையும் நேரடியாக சென்றடைகின்றன.யாருக்கு என்ன தேவை என்ன என்பதை உணர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.கடந்த 10 ஆண்டுகளில் வறுமையின் பிடியில் இருந்து 25 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளனர்
  • 10 ஆண்டுகளில் ரூ.34 லட்சம் கோடி நேரடி மானியம்
  • விவசாயிகள், ஏழைகள் என மக்கள் நலத் திட்டங்கள் மூலம் 10 ஆண்டுகளில் ரூ.34 லட்சம் கோடி மானியம் சென்றடைந்துள்ளது
  • 10 ஆண்டுகளில் 7 ஐஐடி.கள், 15 எய்ம்ஸ், 390 பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளன
  • 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது
  • ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு நாங்கள் மிக உயரிய முன்னுரிமை அளித்து வருகிறோம்
  • MSP தொடர்ந்து உயர்த்தப்பட்டுள்ளது
  • குறைந்தபட்ச ஆதரவு விலை குறிப்பிட்ட கால அவகாசத்தில் உரிய முறையில் உயர்த்தப்பட்டு வருகிறது
  • 10 ஆண்டுகளில் 30 கோடி பெண்களுக்கு முத்ரா கடன் வழங்கப்பட்டுள்ளது
  • 4 கோடி விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு வழங்கப்பட்டுள்ளது
  • மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது
  • பெண்கள் உயர்கல்வி பயில்வது 10 ஆண்டுகளில் 28% அதிகரிப்பு.பெண்களுக்கான இட ஒதுக்கீடு, முத்தலாக் தடை சட்டங்களால் மகளிர் பயன் அடைந்துள்ளனர்
  • பிரதமரின் கிசான் திட்டத்தால் 11.8 கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர்
  • கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் புதிதாக 3000 ஐடிஐ-களை ஏற்படுத்தியுள்ளோம்
  • கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் உண்மையான சராசரி வருவாய் அதிகரித்துள்ளது
  • ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதன் மூலம் வரி அடிப்படையிலான வளர்ச்சி மேம்படுத்தப்பட்டுள்ளது
  • 1 கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள்
  • ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சார திட்டம் அமல்படுத்தப்படும். சூரிய மேற்கூரை வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சார வழங்கப்படும்
  • வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, வருமான வரி செலுத்துவோருக்கு ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரும்.தற்போதைய வருமான வரி விகிதமே அமலில் இருக்கும்
  • உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தவும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும்.
  • புதிய வருமான வரி திட்டத்தின் கீழ் ரூ.7.5 லட்சம் வருமானம் வரையில் விலக்கு அளிக்கப்படுகிறது
  • நாட்டில் உள்ள விமான நிறுவனங்கள் புதிதாக 1,000 விமானங்கள் வாங்க உள்ளன.
  • விமான நிலையங்கள் இரு மடங்கு அதிகரிக்கப்பட்டு 149ஆக உயரும்.
  • மின்சார வாகன உற்பத்திக்கும், சார்ஜிங் மையங்கள் அமைக்கவும் ஊக்குவிக்கப்படும்
  • சரக்கு ரயில் போக்குவரத்துக்காக பிரத்யேகமாக வழித்தடங்கள் செயல்படுத்தப்படும்
  • 40,000 சாதாரண ரயில் பெட்டிகள் ‘வந்தே பாரத்’ தரத்தில் புதுப்பிக்கப்படும்!
  • பாதுகாப்புத்துறை நிதி ரூ.11,11,111 கோடி ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட சராசரியாக ரூ.5,17,573 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • “மாநிலங்களுக்கு வட்டியில்லாக் கடனாக ₹1.2 லட்சம் கோடி வழங்கப்படும்”
  • 10 ஆண்டுகளில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2.4 மடங்கு உயர்வு