கோவையில் நாளை சுதந்திர தின விழா கொண்டாட்டம்… கலெக்டர் கிராந்தி குமார் தேசிய கொடி ஏற்றுகிறார்..!

கோவை ஆக 14 நாடு முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வ உ சி பூங்கா மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது. இதில் கலெக்டர கிராந்தி குமார் கலந்து கொண்டு காலை 9 – 05 மணிக்கு தேசிய கொடி ஏற்றுகிறார். தொடர்ந்து போலீசார் ஊர்க்காவல் படைபடையினர்,தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோரின் அணி வகுப்பை ஏற்றுக் கொள்கிறார். இதையடுத்து பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார். மேலும் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பதக்கங்களை கலெக்டர் கிராந்தி குமார் அணிவிக்கிறார். இந்த விழாவில் காந்தி மாநகர் அரசு பள்ளி அரசூர் அரசு பள்ளி உள்பட 10 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 150 மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி கோலை சரக டி.,டி ஐ ஜி.துணை போலீஸ் கமிஷனர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி, சிறைத்துறை அதிகாரிகள் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். கொடி ஏற்று விழா நடைபெறும் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர் இன்று காலையில் சுதந்திர தின விழாவின் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நாளை காலை 9- 10 மணிக்கு மேயர் கல்பனா ஆனந்த குமார தேசிய கொடி ஏற்றுகிறார். இதில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.கோவை தெற்கு பகுதி தீயணைப்பு நிலையத்தில் நாளை காலை 6 மணிக்கு கொடியேற்று விழா நடக்கிறது . இதே போல நீதிமன்றம், வங்கிகள், மத்திய -மாநில அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் விவசாய பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்களில் தேசிய கொடி ஏற்றப்படுகிறது..