கோவை அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் இருப்பதாக கூறி பல வாலிபர்களை ஏமாற்றி பணம் பறித்த மோசடி கும்பல் தலைவன் மற்றும் 5 இளம்பெண்கள் உட்பட 7 பேர் கைது..!!

கோவை: ஆன்லைன் மூலம் கோவையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் தங்க வைக்கபட்டிருப்பதாகவும், அவர்களுடன் உல்லாசமாக இருக்க ரூ 5 ஆயிரம் முதல் ரூ 10 ஆயிரம் வரை ஆகும் என்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் அந்த இணையதளத்தில் பல இளம் பெண்களின் புகைப்படங்களும் இருந்தன. இதை நம்பிய வாலிபர்கள் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினர். இதை யடுத்து அவர்கள் ஆன்லைன் மூலம் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தும் படி கூறினர். இதனை நம்பிய வாலிபர்கள் பணத்தை கொடுத்ததும் அவர்களுக்கு குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு வரும்படி தெரிவிக்கின்றனர்.ஆனால் அங்கு அழகிகள் இல்லாததால் ஏமாற்றமடைந்து குடியிருப்பு காவலாளியுடன் தகராறில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தினர் .இதில் முதல்கட்டமாக மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரன் ( வயது 25) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்தி விசாரணையில் பெங்களூரில் இருந்து இந்த கும்பல் தலைவன் செயல்பட்டு வருவது தெரியவந்தது .இதையடுத்து போலீஸ் கமிஷன் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர் சிலம்பரசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் தனிப்படையினர் பெங்களூருக்கு சென்று மோசடி கும்பல் தலைவன் ரிஷ்வான் ( வயது 31) பிரசன்னா (வயது31 )மற்றும் 5 இளம்பெண் என 7பேரை கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர். இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-கோவை, சென்னை போன்ற பெரிய நகரங்களை குறிவைத்து குறிப்பிட்ட ஒரு இணையதளத்தில் பெண்களின் புகைப்படம் மற்றும் செல்போன் எண்களை வெளியிட்டுள்ளனர். இதனை நம்பி 100க்கும் மேற்பட்டவர்கள் பணம் கட்டிருப்பதாக தெரிகிறது. இந்த மோசடி கும்பல் இப்படி பல லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளனர், கடந்த 4 மாதங்களாக இவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி இந்த கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்து இருக்கிறோம். ஆண்களிடம் ஆசை வார்த்தைகூறி ஏமாற்றுவதற்காக இளம்பெண்களுக்கு மாதம் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ 40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கி வந்துள்ளனர். இதுவரை மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களை கஸ்டடி எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம்.இந்தக் கும்பலிடம் ஏமாற்றப்பட்டவர்கள் தாராளமாக புகார் தெரிவிக்கலாம். கோவையில் கஞ்சா விற்பவர்கள், வாங்குபவர்கள், உபயோகிப்பவர்கள் பெயர் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பழைய கஞ்சா வியாபாரிகளின் பெயர் பட்டியலும் கணக்கிடப்பட்டுள்ளது’கஞ்சா கும்பலில் பிடிக்க தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.இந்த மோசடி கும்பலை கைது செய்த தனிப்படையினருக்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.