கோவை வடவள்ளி அருகே உள்ள லட்சுமி நகர் பிருந்தாவன் குகன் கார்டனைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது மனைவி ராதா வெங்கட்ராமன் ( வயது 81 ) இவரை கவனிப்பதற்காக தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையம் இ..பி. காலனியை சேர்ந்த பிரபாகரன் மனைவி அனுஷா ( வயது 32) என்பவர் மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளத்துக்கு நியமிக்கப்பட்டிருந்தார். வங்கி மூலம் தனக்குரிய சம்பள பணத்தை எடுத்து வந்தார் .இந்த நிலையில் ரத்னா வெங்கட்ராமன் வங்கி கணக்கிலிருந்த ரூ. 4 லட்சத்து 60 ஆயிரத்தை அனுஷா எடுத்து மோசடி செய்து விட்டார். இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிராங்கிளின், சப் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அனுஷாவை கைது செய்தனர்..