தென் கொரியாவில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதாவது கடந்த 120 ஆண்டுகளில் தென் கொரியா இத்தகைய கடும் பனிப்பொழிவை சந்தித்தது இல்லை என கூறப்படுகிறது.
இந்த கடும் பனிப்பொழிவு காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தென் கொரியாவில் நிலவில் வரும் இந்த அசாதாரன பனிப்பொழிவு காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது மட்டுமின்றி அங்கு உயிரிழப்புகளும் பதிவாகி வருகின்றன. அதன்படி தென் கொரியாவின் கடும் கடும் பனிப்பொழிவில் சிக்கியது வரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு இதே நிலை நீடித்தால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், தென் கொரியாவில் தற்போதை நிலை குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான காலநிலைகளை கொண்டிருக்கும். இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது, அந்த நாட்டின் புவி அமைப்பு ஆகும். ஒரு நாட்டின் புவியமைப்பும் அதன் இயற்கை வளங்களும் அந்த நாட்டின் காலநிலையை தீர்மானிக்கின்றன. பெரும்பாலான நாடுகளில் குளிர் வெப்பம் என அனைத்து கால நிலைகள் இருந்தாலும் சில நாடுகளில் ஒரே விதமான காலநிலைகள் நீண்ட நாட்கள் தொடர்கின்றன. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் நான்கு விதமான காலநிலைகள் இருக்கும். ஆனால் ஒரு சில நாடுகளில் எப்போதும் பணி அல்லது எப்போதும் வெயில் என்ற சூழல் இருக்கும். சில நாடுகளில் குளிர் காலத்தின் போது அதிக பனிப்பொழுது ஏற்படும். அந்த வகையில் தற்போது தென் கொரியாவில் பனிக்காலம் நிகழ்வு வருகிறது. ஆனால், அங்கு வழக்கத்திற்கு மாறாக பனிப்பொழிவு நிலவி வருகிறது.
தென் கொரியாவில் தற்போது வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதாவது தென் கொரியாவில் தலைநகரமான சியோலில் சுமார் 16 இன்ச் அளவிற்கு பனி படர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியே வராமல் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இந்த கடும் பனிப்பொழிவு காரணமாக அங்கு விமான போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த நவம்பர் 28 ஆம் தேதி தென் கொரியாவில் சுமார் 140-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் அங்கு கடும் பனிப்பொழிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பனிப்பொழிவால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒரு நபர் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து வெளியான அறிவிப்பில் பனிப்பொழிவில் சிக்கி சுமார் 11 பேர் உயிரிழந்ததால காவல்துறை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தென் கொரியாவில் நிலவும் இந்த கடுமையான நிலை காரணமாக அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 1907 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் தென் கொரியாவில் இத்தகைய கடும் பனிப்பொழிவு நிலவுவதாக ஆய்வுகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.