எரி சாராய வியாபாரி மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது..!

கோவை மாவட்டம், பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் எரிசாராயம் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்ததாக கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பாபு மகன் சிராவன் (வயது33) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்படி நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர். கிராந்தி குமார் பாடி மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இதன் பேரில் எரிசாராயம் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த சிராவனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.இதற்கான உத்தரவு நகல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு நேற்று வழங்கப்பட்டது..