கோவையில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம்- சிறுவன் உள்பட 2 பேர் போக்ஸோவில் கைது..!

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி. இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு கோட்டை பாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (22) என்பவருடன் திருமணம் நடந்தது.
இந்நிலையில் சிறுமி கர்ப்பமானார்.சம்பவத்தன்று பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து சிறுமி மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் சிறுமியிடம் விசாரணை மேற் கொண்ட போது குழந்தை திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள் அன்னூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த அருண்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம், அன்னூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் ஐ.டி.ஐ படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஐ.டி.ஐ சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறிச்சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை அன்னூர் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த மாயமான, மாணவியை தேடி வந்தனர். அப்போது சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் சிறுமி வெளியூரில் இருந்தது தெரியவந்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமி மற்றும் சிறுமியுடன் தங்கி இருந்தவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியுடன் இருந்தது 17 வயது சிறுவன் என்பதும், அவர் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றதும் தெரியவந்தது. அப்போது மாணவியை சிறுவன் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலசார் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் சிறுவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். சிறுமியை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.