கோவையில் ஐடி நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை கொள்ளை..!

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம், சிவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி .இவரது மகன் மோகன்ராஜ் (வயது 35) ஐ .டி .நிறுவனத்தின் வழியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 28ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருப்பூரில் உள்ள தன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்கள். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் உடைக்கப்பட்டிருந்தது உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 13 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து மோகன்ராஜ் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார் .சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.