கோவையில் உணவு டெலிவரி பாய்க்கு அடி உதை- பைக்கில் முந்திச் சென்றதால் நடந்த விபரீதம்..

கோவையை சேர்ந்தவர் ஸ்ரீ விக்னேஷ் (வயது 18). இவர் தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் தனக்கு வந்த ஆர்டரை எடுத்துக்கொண்டு ஸ்ரீ விக்னேஷ் தனது பைக்கில் சாய்பாபா காலனி பகுதியில் சென்று கொண்டிருன்ரார். அப்போது பைக்கில் தனக்கு முன்னே சென்றவர்களை ஸ்ரீ விக்னேஷ் முந்திச்சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஸ்ரீ விக்னேசை தடுத்து நிறுத்தி ரயில்வே டிராக் பகுதிக்கு அழைத்து சென்று கருங்கற்களால் அடித்திருக்கின்றனர். மேலும், அவரது உடைமைகளை பறித்துச் சென்றனர். காயமடைந்த வாலிபருக்கு நான்கு தையல் போடப்பட்டு சிகிச்சை தரப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஸ்ரீ விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.