சினிமா பாணியில்… போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்திய பிரபல ரவுடி சஞ்சய் ராஜா… பதில் தாக்குதல் நடத்திய காவல்துறை-நடந்தது என்ன..?

கோவை  : இன்று காலை சுமார் 6.30 மணிக்கு சரவணம்பட்டி கரட்டுமேடு முருகன் கோவில் அருகில் ரேஸ்கோர்ஸ் காவல்நிலைய குற்ற எண் 81 /23 சட்டபிரிவு 147, 148, 506(ii) 302, IPC r/w27(3) Arms act குற்றவாளியான சஞ்ஜைராஜா என்பவர் வழகின் குற்ற சொத்தான கை துப்பாக்கியை எடுத்து தருவதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து நிலைய ஆய்வாளர் கிருஷ்ணலீலா, உதவி ஆய்வாளர்கள் சந்திரமூர்த்தி, சந்திரசேகர், சிறப்பு உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் முதல் நிலை காவலர் 2968 ஸ்ரீதர் ஆகியோர்களை கரட்டுமேடு முருகர் கோயில் வடபுரம் உள்ள மலை சரிவிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த கைதுப்பாக்கியை எடுத்தவுடன் ஆய்வாளரை நோக்கி ஒரு குண்டு சுட்டுள்ளார் . நொடி பொழுதில் ஆய்வாளர் கிருஷ்ணலீலா தன்னை தற்காத்துக் கொள்ள அருகில் இருந்த மரத்தின் பின்பு தான் மறைந்து விடவே மீண்டும் ஒருகுண்டு அவரை நோக்கி உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று சொல்லிக் கொண்டு கொலைவெறியுடன் சுட்டுள்ளார். உடனே தங்களை தற்காத்துக் கொள்ள வேறு வழியின்றி உடன் இருந்த உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தன்னிடம் இருந்த கை துப்பாக்கியால் சஞ்சராஜாவின் இடது கால் முட்டியில் சுட்டுள்ளார். அது இடதுக்கால் முட்டியில் படவே சஞ்சசைராஜா தனது கையில் இருந்த துப்பாக்கியை கீழே போட்டுள்ளார். மேற்படி நபரை காவல்துறை வாகனத்தில் அழைத்து கோவை அரசு மருத்துவமனையில சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.ரவுடி சுடப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..