தேசிய பறவை மயில்கள் உயிரிழப்பு: வேட்டையாடப்பட்டதா ? அல்லது மின்சாரம் தாக்கியதா ? – தகவல் அளித்து 2 நாட்கள் கடந்தும் கண்டு கொள்ளாத வனத்துறை

தேசிய பறவை மயில்கள் உயிரிழப்பு: வேட்டையாடப்பட்டதா ? அல்லது மின்சாரம் தாக்கியதா ? – தகவல் அளித்து 2 நாட்கள் கடந்தும் கண்டு கொள்ளாத வனத்துறை

கோவை டாடாபாத் பகுதியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் நேற்று இரண்டு மயில்கள் இறந்து கிடந்ததாகவும், அதில் இரண்டு மயில்கள் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து உள்ளது. அதில் ஒரு மயிலை நாய்கள் தூக்கிச் சென்றதாகவும், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தும் அங்கு சென்று அந்த மயில்களை வனத்துறையினர் காப்பாற்றவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தேசிய பறவையான மயில்கள் அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததா ? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக மைல்கள் வேட்டையாடப்பட்டதா ? என்பது குறித்து வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற தேசிய பறவையான மயில்களை காப்பாற்ற முடியும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மருந்துக்காகவும், கறிக்காகவும் சமூக விரோதிகளால் வேட்டையாடப்பட்ட சம்பவமும் கோவையில் அரங்கேரி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.