கோவை கவுண்டம்பாளையம் அசோக் நகரை சேர்ந்தவர் முருகேசன் அவரது மகன் சிவக்குமார் (வயது 24) பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார்.இவரது மனைவிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அனன்யா என்ற பெண் குழந்தை பிறந்தது.நேற்று குழந்தையின் தாயார் குழந்தைக்கு தாய் பால் கொடுத்துவிட்டு தூங்கிவிட்டார்.சிறிது நேரம் கழித்து பார்த்தபோது குழந்தைக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் குழந்தை இறந்து விட்டது .இது குறித்து சிவக்குமார் துடியலூர் போலீஸ் நிலையத்தில்புகார் செய்துள்ளார் .போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply