கோவை ஜி என் மில்ஸ், சுப்ரமணியன் பாளையத்தைச் சேர்ந்தவர் ஜி கார்த்திக், இவர் தனது மனைவியின் பெயரில் வாங்கிய இரண்டு வீட்டு மனைகளின் கட்டட வரைபட அனுமதிக்காக, பிளிச்சி பஞ்சாயத்து அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார், அதற்கான அரசு கட்டணங்களை செலுத்திய நிலையில், கடந்த 30ஆம் தேதி, வரைபட அனுமதிக்காக எழுச்சி பஞ்சாயத்தின் தலைவர் சாவித்திரியை சந்தித்த நிலையில், அவர் அவரது கணவர் ராஜனை போய் பார்க்குமாறு கூறினார், இதனைத் தொடர்ந்து புகார்தாரர் கார்த்திக், பஞ்சாயத்து தலைவர் சாவித்திரியின் கணவரை சந்தித்தபோது, அவர் ஒரு வரைபடத்திற்கு 10 ஆயிரம் வீதம், இரண்டு வரைபடத்திற்கு 20 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக கேட்ட நிலையில், தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க இயலாது என கூறிய கார்த்திக்கிடம், 15000 கொடுக்குமாறு சாவித்திரி கேட்டதால் , மன உளைச்சல் ஏற்பட்ட புகார் தாரர் கார்த்திக் கோவை லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார்,
இதனை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு துறையினரின் ஆலோசனையின் பேரில், பிளிச்சி பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்த ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி மற்றும் அவரது கணவர் ராஜனிடம் புகார்தாரர் கார்த்திக் லஞ்சமாக பதினைந்தாயிரம் கொடுக்கும் பொழுது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சாவித்திரி மற்றும் அவரது கணவர் ராஜன் ஆகியோரை கைது செய்தனர்,
Leave a Reply