கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை வழக்கில் கணவர், மாமனார், மாமியார் அதிரடி கைது..!

கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர் ரோட்டில் உள்ள ஜவஹர் நகரை சேர்ந்தவர் கணேசன் ( வயது65) இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி விமலா ( வயது 56) இவர்களுக்கு தியா காயத்ரி (வயது 25) என்ற மகள் உள்ளார். இவர்பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார். இவருக்கு 3 – 9 -20 23 அன்று தீக்ஷித் என்பவருடன் திருமணம் நடந்தது.கருத்து வேறுபாடு காரணமாக தியா காயத்ரிகோவையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்..கடந்த 21 ஆம் தேதிக்கு பிறகு கணேசன் யாரிடமும் செல்போனில் பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர் அனில் குமார் என்பவர் சந்தேகத்தின் பேரில் அவரது வீட்டிற்கு போய் பார்த்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கம் தாழ் போடப்பட்டிருந்தது. தட்டிப் பார்த்தபோது கதவை திறக்கவில்லை இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது 3பேரும் படுக்கை அறையில் சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது .இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் உதவிபோலீஸ் கமிஷனர் நவீன் குமார், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் தியா காயத்திரி தனதுகணவரின் கொடுமை தாங்க முடியாமல் கோவையில உள்ளபெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.ஒரே மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே? என்ற கவலையில் 3பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.தற்கொலைக்கு முக்கிய காரணம் தியா காயத்ரியின் கணவரும் ,அவரது பெற்றோர்களும்தியாவுக்கு படுத்திய கொடுமை தான் என்பது தெரியவந்துள்ளது.அதற்கான முக்கிய ஆதாரங்களும் சிக்கியது.தற்கொலை செய்து கொள்ளும் முன் தியா காயத்ரி எழுதிய கடிதம் போலீசிடம் சிக்கியது .அதில் அவர் கூறியிருப்பதாவது தங்களது சாவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள் . அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுங்கள் என்றும் எழுதப்பட்டிருந்தது. மேலும் தனது கணவரின் நடத்தை குறித்தும் தியா காயத்ரி விரிவாக குறிப்பிட்டு இருந்தார். அதன் பேரில் பெங்களூரு விரைந்த போலீசார் தீட்சித்தை அழைத்து வந்து விசாரித்தனர் .மேலும் ஆர்.டி.ஓ விசாரணையும் நடந்தது. முடிவில் தீட்சித் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரது தந்தை சிவக்குமார் மற்றும் தாயார் லதா ஆகியோரும் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.