மளிகை கடையில் அரிசி -எண்ணெய் திருடிய ஓட்டல் ஊழியர் கைது..!

மளிகை கடையில் அரிசி -எண்ணெய் திருடிய ஓட்டல் ஊழியர் கைது..! கோவை : மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள கெண்டையூரை சேர்ந்தவர் ராஜன் (வயது 55) மேட்டுப்பாளையம் அண்ணாஜிராவ் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சாமான்கள் வாங்குவது போல சென்ற ஒரு ஆசாமி அங்கிருந்த 26 மூட்டை அரிசி, 3 பெட்டி எண்ணைஆகியவற்றை நைசாகதிருடிக் கொண்டுவெளியே சென்றார் அவரை கடை உரிமையாளர் ராஜன் கையும் களவுமாக பிடித்து மேட்டுப்பாளையம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பக்கம் உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த கணேஷ் பிரபு ( வயது 37)என்பது தெரியவந்தது. இவர் அங்குள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அவரிடமிருந்து எண்ணெய், அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.