மினி லாரி எரிந்து நாசம்..! 

மினி லாரி எரிந்து நாசம்..!  கோவை கரும்புக்கடை எம்.ஜி.ஆர் .நகர் 3 -வது வீதியை சேர்ந்தவர் ஷேக் தாவூத் (வயது 50) இவர் சொந்தமாக 3ஈச்சர் லாரிகள் வைத்து ஓட்டி வருகிறார் நேற்று முன் தினம் இவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த ஈச்சர் லாரிதிடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போத்தனூர் போலீசில்ஷேக் தாவூத் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.