தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் காதி பொருள்கள்,அரசு உப்பு மற்றும் பனைவெல்லம் விற்கும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சில நிபதனைகள் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும். அதன்படி ஒரு மாதத்தில் சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய வேண்டும் என்றும்,கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய வேண்டும் என்றும், நகர்ப்புற ரேஷன் கடைகளில் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு நிர்ணயித்த இந்த வரம்பை பூர்த்தி செய்யும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அந்த மாதம் செலுத்தப்படும் விற்பனை தொகையில் ஒரு சதவீதம் ஊக்க தொகையாக கூட்டுறவு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது .இந்த அறிவிப்பு ரேஷன் கடை ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply