சரக்கு ஆட்டோவில் கடத்திய 50 கிலோ குட்கா பறிமுதல்- 3 பேர் கைது..!

கோவை சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோடு பகுதியில் போத்தனூர் இன்ஸ்பெக்டர் நடேசன்,சப் இன்ஸ்பெக்டர் முருகேஷ் ஆகியோர் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள் .அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் .அதில் 50 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .ஆட்டோவும், குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இதை கடத்தி வந்த பாப்பநாயக்கன்பாளையம், புது சித்தா புதூரை சேர்ந்த கார்த்திகேயன் ( வயது 32) சுந்தராபுரம் மதுக்கரை ரோட்டை சேர்ந்த லட்சுமணன் (வயது 33) தினேஷ்குமார் (வயது 24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.மேலும் விசாரணை நடந்து வருகிறது..