வால்பாறையில் ஹான்ஸ் மற்றும் கூழ்லீப் போதைப் பொருள் வைத்திருந்த மளிகைக் கடைக்கு சீல் – உரிமையாளர் மீது வழக்கு.!!

கோவை மாவட்டம் முழுவதிலும் சட்டத்துக்கு புறம்பாக விற்க்கப்படும் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிற்கிணங்க காவல்துறையினர் துரித நடவடிக்கை மேற்க் கொண்டு வருகின்றனர். அதேபோல வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆலோசனைக்கு இணங்க உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையில் காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த மளிகைக் கடையில் பதுக்கி வைத்திருந்த சுமார் இரண்டு கிலோ எடையுள்ள ஹான்ஸ் மற்றும் கூழ்லீப் ஆகிய போதைப்பொருள்களை கைப்பற்றி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவு உணவு பாதுக்காப்பு அலுவலர் காளிமுத்து தலைமையில் காவல் துறையினர் முன்னிலையில் அந்த மளிகைக்கடைக்கு நேற்று சீல் வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..