வால்பாறையில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த சம்பவத்திற்காக போராட்ட வழக்கில் சிக்கிய 27 பேர் விடுதலை.!!

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 2018 ஆண்டு வால்பாறை அருகே உள்ள நடுமலை எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவனை சிறுத்தை தாக்கியதில் அவர் உயிரிழந்தார் இச்சம்பவத்தை தொடர்ந்து உயிர் இழந்த சம்பவத்திற்காக சம்பவத்தை கண்டித்து அப்போது காந்தி சிலை பேருந்து நிலையம் மற்றும் வால்பாறை தலைமை அஞ்சலகம் முன்பும் போராட்டத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இரண்டு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரிவு 323 மற்றும் 324 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் மொத்தம் 27 நபர்கள் மீது பொதுநல வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு நேற்று முன்தினம் வால்பாறை நீதிமன்றத்தில் நடைபெற்றது அதில் பொதுநல வழக்கு பதியப்பட்ட 27 பேர்களும் குற்றவாளி இல்லை என்று வால்பாறை நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில் குமார் தீர்ப்பு வழங்கி அனைவரையும் விடுதலை செய்தார் இதையறிந்த சம்பந்தப்பட்ட வழக்கால் பாதிக்கப்பட்ட அனைவரும் பெரும் மகிழ்ச்சியடைந்து வழக்கை கடந்த ஐந்து வருடங்களாக வெகு சிறப்பாக வாதாடி விடுதலை பெற்றுத்தந்த வழக்கறிஞர் த.பால்பாண்டிக்கு சால்வை அணிவித்து தங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர் இதேபோல பல்வேறு தரப்பினரும் வழக்கறிஞரை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்