காந்திகிராம பல்கலைக்கழக துணை வேந்தராக குர்மித்சிங் நியமனம்- -எதிர்ப்பு தெரிவித்து ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் 3 பேர் ராஜினாமா.!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சின்னாளப்பட்டி காந்திகிராம பல்கலைக் கழகத்தின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களாக இருந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆனந்தகுமார் (தமிழ்த்துறை), வில்லியம் பாஸ்கரன் (சமூக அறிவியல் துறை), பாலசுந்தரி (ஆங்கில துறை) ஆகிய 3 பேரும், தங்களது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இதற்கிடையில் காந்திகிராம பல்கலைக்கழக சட்ட விதிமுறைகளின் படியும், பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளின் படியும் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம் செய்யும் வரை, இதே பல்கலைக்கழகத்தில் உள்ள மூத்த பேராசிரியர் ஒருவரை தான் பொறுப்பு துணைவேந்தராக நியமிக்க வேண்டும். ஆனால் அந்த விதிமுறை மீறப்பட்டுள்ளதாக அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது…