ஆள் இருந்த வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளை முயற்சி..!

கோவை கணபதி வெங்கடேசபுரம், ,முதல் விதியைச் சேர்ந்தவர் விஜயராஜ் (வயது 63) நேற்று இவரது வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் இவரது வீட்டின் கதவை உடைக்கும் சத்தம் கேட்டது எழுந்து பார்த்த போது அங்கு ஆள் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது .இது குறித்து பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து விஜய் ராஜ் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.