ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி வேண்டுமென கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது

ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி வேண்டுமென கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்த ஸ்ரீமதி என்ற மாணவி உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பல்வேறு தரபினர் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியே போர்களமாக மாறியது. போராட்டம் நடத்தியர்வர்களில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து டிஜிபி உத்தரவிற்கிணங்க விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்திற்குள் மக்கள் அதிகாரம் அமைப்பினர், மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டுமென கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ஸ்ரீமதி தற்கொலை வழக்கில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாகவும், போலிஸ் அராஜகம் ஒழிக என்றும் முழுக்கங்களை எழுப்பினர். மேலும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

அங்கிருந்த காட்டூர் காவல்துறையினர் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்து செய்து அழைத்து சென்றனர்.