நியூட்ரினோ திட்டத்துக்கு நோ சொன்ன தமிழக அரசு.!!

புதுடில்லி: நியூட்ரினோ திட்டத்தை விட மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பே மிகவும் முக்கியம் எனக்கூறி இத்திட்டத்தை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள நியூட்ரினோ திட்டம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.அதில், ‘நியூட்ரினோ திட்டத்தை விட மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பே மிகவும் முக்கியம். தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை அனுமதிக்க முடியாது,’ என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.