கோவை உப்பிலிபாளையம் தண்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் .இவரது மகள் கவி ஜா (வயது 24)ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரை கீர்த்திவர்மன் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தார். கீர்த்திவர்மன் கவி ஜாவை திருமண செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று ஜாலியாக இருந்துள்ளார். .தற்போது அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இது குறித்து கவி ஜா கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் இது தொடர்பாக விசாரணை நடத்தி காதலன் கீர்த்திவர்மன் அவரது பெற்றோர்கள், தம்பி ஆகியோர் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Leave a Reply