கோவையில் ரூ 3 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்- டிரைவர்,தரகர் கைது..!

கோவை வெரைட்டி ஹால் ரோடு இன்ஸ்பெக்டர் சசிகலா ,சப் இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் ஆகியோர் நேற்று கோவை ரயில் நிலையம் பக்கமுள்ள கூட்செட் ரோட்டில் ரோந்து சுற்றிவந்தனர் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி ஒரு மூட்டையுடன் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து மூட்டையை சோதனை செய்தனர் .அதில் 30 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ 3 லட்சம் இருக்கும் .இது தொடர்பாக இதை கடத்தி வந்த கோவை புலிய குளம், பெரியார் நகரை சேர்ந்த முத்தாலப்பன் ( வயது 31)ஆலந்துறை, பூலுவாம்பட்டியைச் சேர்ந்த ராஜா என்ற கருப்பசாமி ( வயது 49 ) ஆகியோரை கைது செய்தனர். இவர்களில் முத்தாலப்பன் டிரைவராக வேலை பார்த்து வந்தார் .இவர் மீது திருப்பூர் ,திண்டுக்கல், கோவை உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா கடத்தல் வழக்கு உள்ளது.இதே போல கைது செய்யப்பட்ட ராஜா என்ற கருப்பசாமி நிலத்தரகராக வேலை பார்த்து வருகிறார்.தற்போது முதல் முறையாக கஞ்சா வியாபாரத்தில் இறக்கி உள்ளார்.