கோவை ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா: நோட்டமிட்டு தூண்டில் போட்டு பிடித்த தனிப்படை போலீஸ்

கோவை ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா: நோட்டமிட்டு தூண்டில் போட்டு பிடித்த தனிப்படை போலீஸ்!!!

போதை பிரியர்களின் அலாதி பிரியமான போதைப்பொருள் கஞ்சா. கஞ்சாவை போதைக்காக பயன்படுத்தும் போதை பிரியர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை கொடிகட்டி பறக்கின்றது. இந்த நிலையில் கஞ்சா ஆப்பரேஷன் 2.ஓ நடத்தப்பட்டு கஞ்சா வியாபாரிகள் ஒடுக்கப்பட்டனர். கஞ்சா வியாபாரிகளுக்கு தமிழகத்தில் கஞ்சா கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கின்ற நிலையில் ஆந்திராவிற்கு கஞ்சா வியாபாரிகள் சென்று கஞ்சாவை வாங்கி வருவதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் தரப்பட்டிருந்தன. இதனையடுத்து ஆந்திராவில் இருந்து வரும் ரயில்களை நோட்டமிட்டு கஞ்சா வியாபாரிகள் பிடிக்க காத்திருந்த போலீஸ் பிரபல கஞ்சா வியாபாரி கைது செய்திருக்கின்றனர். முதலப்பன், கருப்புசாமி இரண்டு மூட்டைகளுடன் ரயிலில் இறங்கி வந்திருக்கின்றனர். அவர்கள் வைத்திருந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் 30 கிலோ கஞ்சா இருந்திருக்கின்றன. கஞ்சாவை பறிமுதல் செய்த போலிஸ் கஞ்சா வியாபாரிகளின் பின்புலத்தை விசாரித்த போலிஸாருக்கு கொடிகட்டி பறக்கும் கஞ்சா வியாபாரிகள் என்பது தெரிய வந்தன. இதில் முதலப்பன் மீது தமிழ்நாடு ஆந்திராவில் பல்வேறு வழக்குகள் நடந்துவருகின்றன. முன்னதாக கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சிறை சென்று வெளியே வந்தவன் முதலப்பன் என்பதும் இவன் பிரபல கஞ்சா வியாபாரி என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தன. இருவரையும் கைது செய்த தனிப்படை போலீஸ் சிறையிலடைத்து நடவடிக்கை ஈடுபட்டிருக்கின்றனர். கஞ்சாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்ற அறையில் ஆந்திராவை நாடிச் சென்று கஞ்சாவை வாங்கி வரும் கஞ்சா வியாபாரிகளின் கொட்டத்தை அடக்க தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என உயர் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.