கோவை பீளமேடு, நேரு நகர் டெக்ஸ் பார்க் ரோட்டை சேர்ந்தவர் பாலசுந்தரம் இவரது மனைவி கமலம் ( வயது 77 )இவர் நேற்று காலையில் டெக்ஸ் பார்க் ரோட்டில் தனது மகன்,மருமகளுடன் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார்.நடைப்பயிற்சியை முடித்துவிட்டு திரும்பி வரும்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.இது குறித்து மூதாட்டி கமலம் பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.
Leave a Reply