ஜி-20 மாநாடு: சென்னையில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை கல்விக்குழு கூட்டம்..!

ஜி-20 மாநாட்டையொட்டி சென்னையில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை முதலாவது கல்விக்குழு கூட்டம் நடக்கின்றன. ஜி-20 மாநாட்டையொட்டி சென்னையில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை முதலாவது கல்விக்குழு கூட்டம் நடக்கின்றன. கடந்த டிசம்பா் 1ஆம் தேதி ஜி- 20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா முறைப்படி ஏற்றது. இந்த ஜி-20 நாடுகளின் பல்வேறு அரசுகளின் தலைவா்கள் பங்கேற்கும் அடுத்த உச்சி மாநாடு அடுத்த ஆண்டு புது தில்லியில் செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இந்த உச்சி மாநாட்டுக்கு ஒரு லட்சம் விருந்தினா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த ஜி 20 மாநாட்டுக்காக நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட தயாரிப்புக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

இந்த நிலையில் ஜி 20 மாநாட்டையொட்டி சென்னையில் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 2 வரை முதலாவது கல்விக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி 20 என்பது உலகின் வளா்ந்த மற்றும் வளா்ந்து வரும் பொருளாதார அரசுகள் கொண்ட ஒரு குழுவாகும். இந்த ஜி 20 அமைப்பில் ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜொமனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்ஸிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த 20 நாடுகளும் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 சதவீதத்தை கொண்டுள்ளன. அதேபோன்று உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு மடங்கும், பன்னாட்டு வா்த்தகத்தில் 75 சதவீதத்தையும் இந்த ஜி 20 நாடுகள் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.