அமைதியாக நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்:அனைவருமே பாராட்டுகின்றனர் -அமைச்சர் தகவல்.!!

சென்னை : அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று சென்னை மெரினா கடற்கரை வந்தடைந்த 3 அலங்கார ஊர்திகளை பொதுமக்கள் 4 நாட்கள் பார்வையிட தொடங்கி வைத்தனர்.

அதன்பின் அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், முதல்-அமைச்சர் மக்களைத் தேடி மருத்துவம் என்கிற புரட்சிக்கரமான மருத்துவத் திட்டத்தைத் தொடங்கி வைத்து 50 லட்சம் வரை பொதுமக்கள் பயன்பெற்றிருக்கிறார்கள்.

முதல்-அமைச்சர் பொறுப்பேற்றப் பிறகு தமிழகத்தில் நடைபெற்ற 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலும் மிக அமைதியாக நடத்தப்பட்டுள்ளது. அதேப்போல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கூடுதல் கவனத்துடன் நடத்தப்பட்டு ஒரு சில இடங்களில் சிறு சிறு நிகழ்வுகள் மட்டுமே நடைபெற்றது.

பெசன்ட் நகரில் வாக்குப் பதிவு இயந்திரம் உடைத்ததால் தி.மு.க.வின் வட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்தை ஊதி பெரிதாக்கும் ஜெயக் குமாரின் நாடகம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. மிகவும் அமைதியாக நடத்தப்பட்ட தேர்தல் என்று அனைவருமே பாராட்டுகின்றனர் என்று கூறினார்.