வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி- கோவையில் போலி நிறுவனம் நடத்தியவர் கைது..!

கோவை : அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் விருத்தாச்சலம் ரோட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் ( வயது 56) இவர் வெளிநாடு செல்வதற்கு ஆன்லைன் விளம்பரம் மூலம் கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சேரன் நகரைச் சேர்ந்த ஜோஸ்வா ( வயது 34 )என்பவரை அணுகினார்.இவர் கோவையில் வெளிநாடுகளுக்கு வேலை வாங்கித் தரும் நிறுவனம் நடத்தி வருகிறார்.வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ 17 லட்சத்து 85 ஆயிரம் ரவிசந்திரனிடம் வாங்கினார்.பணத்தை பெற்றுக் கொண்டு அவரை வெளிநாடு அனுப்பவில்லை. பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை .இது குறித்து ரவிச்சந்திரன் ஆர். எஸ். புரம். போலீசில் புகார் செய்தார். போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து போலி வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்த ஜோஸ்வாவை இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து விசாரணை நடந்து வருகிறது..

விசாரணையில் அவர் ஏற்கனவே டில்லி வாலிபரிடம் 42 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர் என்பது தெரிய வந்து உள்ளது. மோசடி செய்த ஜோஸ்வாவிடம் 20 க்கும் மேற்பட்டோர் ஒரு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை இழந்து உள்ளது தெரியவந்தது. காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.