வெள்ளலூர் குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீ… 6 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்..!

கோவை மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள்வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது. இங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக குப்பைகளை தனித்தனி குவியல்களாக கொட்டி தரம் பிரிக்கும் பணி நடக்கிறது. இந்த நிலையில் குப்பை கிடங்கில் ஒரு பகுதியில் நேற்று மாலையில் திடீரென தீப்பிடித்து எறிய தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது.இது குறித்து கோவை தெற்கு பகுதி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கோவை மாவட்ட தீயணைப்பு அதிகாரி அண்ணாதுரை தலைமையில், உதவி மாவட்ட தீயணைப்பு அதிகாரி அழகர்சாமி மேற்பார்வையில் கிணத்துக்கடவு, கோவை தெற்கு, வடக்கு, பீளமேடு உள்ளிட்ட 4 தீயணைப்பு வானங்கள் மூலம் ‘நிலைய தீயணைப்பு அதிகாரிகள்,25 தீயணைப்பு வீரர்கள் சுமார் 6 மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .இதனால் அங்கு புகைமூட்டம் சற்று தணிந்தது .புகைமூட்டம் காரணமாக அந்த பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.புத்தாண்டில் நேற்று முதன்முறையாக வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீப்பிடிக்க தொடங்கியுள்ளது.வெயில் காலம் தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் அந்த பகுதியில் ஒரு தீயணைப்பு வாகனம் 24 மணி நேரமும் தயார் நிலையில் நிறுத்தப்பட உள்ளதாகமாவட்ட தீயணைப்பு அதிகாரி அண்ணாதுரை கூறினார்..