வலைவீசி தேடும் ரசிகர்கள்… நான் என்ன கொலகாரனா..? கொள்ளைக்காரனா… கிண்டலாக கேட்ட அஜித்.. சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவும் புகைப்படம் ..!!

மிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் தற்போது ஏகே 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் முடிவடைந்த நிலையில் அஜித் தனது நண்பர்களுடன் வட மாநிலங்களில் பைக் ரைட் சென்று கொண்டிருக்கிறார்.

அவர் பைக் ரெய்டு மற்றும் கோவிலுக்கு செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தினம்தோறும் இணையத்தில் வெளியாகி வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தன்னை மூன்று நாட்களாக தேடுவதாக கூறி ரசிகர்களிடம், நான் என்ன கொலைகாரனா கொள்ளைக்காரனா என்று கிண்டலாக அஜித் கேட்ட வீடியோ வைரல் ஆகியுள்ளது. லடாக்கில் பைக் ரெடி செய்து வரும் அஜித் தனது ரசிகர்களை சந்தித்து சகஜமாக பேசிய இந்த வீடியோ அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.பொதுவாக ரசிகர்களிடம் அதிக உரையாடாத அவர் இவ்வாறு பொறுமையாக பேசி நலம் விசாரித்தது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.