நீட் விலக்கு… பிரதமர் மோடியுடான சந்திப்பில் இதைபற்றி தான் பேசினோம்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி..!

நீட் பற்றியும் தமிழக மக்களின் மனநிலைமை பற்றியும் கூறினேன். பிரதமரும் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தார்.

பிரதமர் மோடியை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துறை ரீதியிலாக சந்தித்துவிட்டு வந்துள்ளார். இருவருக்குமான சந்திப்பு நேற்று டெல்லியில் பிரதமர் மாளிகையில் நடைபெற்றது. இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டது.

பிரதமர் அவர் கூறுகையில், பிரதமர் சென்னை வந்த போது, அடுத்த முறை டெல்லி வந்தால் கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன் படி அவரை சந்தித்தேன். இது அரசியல் ரீதியிலான சந்திப்பு இல்லை. என குறிப்பிட்டார்.

மேலும், அவர் முதல்வர் நலன் பற்றி கேட்டறிந்தார். பின்னர், பிரதமரின் தயார் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்தேன். என கூறினார். அடுத்து, முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் பற்றி கூறினேன். அது 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறுகிறது என கூறினேன்.

அடுத்ததாக, இந்த அளவில் நடத்தப்படும் ‘கேலோ இந்தியா’ எனும் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை தமிழகத்துக்கு தருமாறு கேட்டுக்கொண்டேன். எனவும் குறிப்பிட்டார்.

மேலும், நீட் பற்றியும் தமிழக மக்களின் மனநிலைமை பற்றியும் கூறினேன். அவரும் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தார். இருந்தும் தமிழகம் சார்பில் சட்ட போராட்டம் தொடரும் என கூறினேன். தொகுதிக்கு ஒரு மைதானம் வேண்டும் என கேட்டிருந்தேன். அது பற்றி விசாரித்தோம். தான் முதல்வராக இருந்த போது என்னென்ன சவால்களை சந்தித்தேன் என்பதை பிரதமர் மோடி மனம் திறந்து பேசினார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் உடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.