கோவை அழகு நிலைய ஊழியர் துண்டு துண்டாக வெட்டி கொலையில் முன்னாள் காதலி உள்பட 3 பேர் இன்று கைது..!!

கோவை அருகில் உள்ள துடியலூர் பகுதியில் கடந்த 15ஆம் தேதி குப்பைத்தொட்டியில் துண்டிக்கப்பட்ட ஒரு ஆணின் கை கிடந்தது.இதை கைப்பற்றிபோலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே காட்டூர் போலீஸ் நிலையத்தில் பிரபு என்பவர் மாயமானதாக வந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஒரு விசாரித்த போது துண்டிக்கப்பட்ட கைக்கு உரியவர் பிரபு (வயது 39) என்று தெரியவந்தது .இவர் ஈரோடு, சூரம்பட்டியை சேர்ந்தவர் ஆவார்.கோவை சரவணம்பட்டியில் வாடகை வீட்டில் தங்கி இருந்து காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார் இவர் 4 வருடங்களுக்கு முன்பு சாந்தி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் .அவர் மாதம் ஒரு முறை ஈரோடு சென்றுமனைவியை பார்த்து விட்டு வருவது வழக்கம். இவர் கடந்த மாதம் மனைவியை பார்ப்பதற்காக ஈரோட்டுக்கு சென்று விட்டு கோவைக்கு வந்து வேலை பார்த்தார். அவர் கடந்த 14ஆம் தேதி சரவணம்பட்டியில் உள்ள தனது அறையில் இருந்து வெளியே சென்றார் அதன் பிறகு அவர் திரும்பி வரவில்லை அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி சாந்தி காட்டூர் போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபுவை தேடி வந்தனர். இந்த நிலையில் வெள்ளலூர்பகுதியில் குப்பைத்தொட்டியில் ஒரு ஆணின் இடது கை கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைரேகையை ஆய்வு செய்தபோது அது காணாமல் போன அழகு நிலைய ஊழியர் பிரபுவின் கைரேகையுடன் ஒத்து போனது தெரியவந்து.இது தொடர்ந்து பிரபு வசித்து வந்த இடம் மற்றும் சில இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் சின்னவேடம்பட்டியில் இருந்த ஒரு கண்காணிப்பு கேமராவில் பிரபு மோட்டார் சைக்கிள் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது .பிறகு வேலை பார்த்த அழகு நிலையத்திற்கு அடிக்கடி சில பெண்கள் வந்து சென்றனர். அதில் 6பெண்களுடன் அவர் மிகவும் நட்பாக பழகிவந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கொலை தொடர்பாக முன்னாள் காதலி கவிதா (வயது 32,) புது சித்தாபுதூர் கார்த்தி (வயது 32) காந்திபுரம் அமுல் திவாகர் (வயது 25)ஆகியோர்இன்றுகைது செய்யப்பட்டார்கள்.அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..இதற்கிடையில் பிரபுவின் உடலில் துண்டிக்கப்பட்ட சில பாகங்கள் துடியலூர் சந்தைக்கு பின்புறம் உள்ள ஒரு கிணற்றில் கிடந்தது இன்று கண்டுபிடிக்கப்பட்டது.