வத்தலகுண்டுவில் சாலை வசதி இல்லாததால் பாதைகளில் தேங்கி நிற்கும் மழைநீர்-பள்ளி குழந்தைகள்,பொதுமக்கள் அவதி..!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் வத்தலகுண்டு பச்சை பட்டிரோடு அப்துல்கலாம் நகரில் சாலை வசதி இல்லாததால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இதில் மழைக்காலங்களில் சேறும் செகதியுமாக இருப்பதால் வாகனங்கள் சென்றுவர மிகவும் சிரமமாக உள்ளது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் நீண்ட தூரம் சேற்றில் நடந்து வந்து பள்ளி வாகனங்களில் ஏறிச் செல்கின்றனர். பாதைகளில் மழை நீர் அதிகமாக தேங்கி இருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே வத்தலகுண்டு அப்துல்கலாம் நகருக்கு சாலை அமைத்து தரும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கப்படுகிறது..