திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சிதையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட சேடபட்டி அருள்மிகு ஸ்ரீ சின்ன பகவதி அம்மன் 48 வது நாள் மண்டல பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேகம் கடந்த 48 நாட்களுக்கு முன்னால் முடிவுற்றதை தொடர்ந்தும் கும்பாபிஷேகம் முதல் மூன்று பட்சம் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்பது ஐதீகம் அதேபோல் ஒரு பட்சத்திற்கு 15 நாள் என்பதால் 45 நாள் என இருந்தாலும் 48 நாள் என்பது இடைக்காலத்தில் ஏற்பட்ட ஒன்று.இந்த பூஜை எதற்காக நடைபெறுகிறது என்றால் கருவறைக்குள் எழுந்தருளியிருக்கும் இறைவனின் தெய்வீக சக்தியை நிலை நிறுத்தவும் அஷ்டபந்தன மருந்து இருகவும் மண்டல பூஜை நடத்தப்படுகிறது. இக்காலத்தில் எண்ணெய் ,பால், பன்னீரில் மட்டும் அபிஷேகம் செய்யலாம் எனவும் கூறப்படுகிறது. எனவே இத்தனை நாள் நடைபெற்ற இந்த பூஜை இன்று நிறைவு பெற்றதையொட்டி அம்மனுக்கு யாக வேள்விகள் நடைபெற்று மண்டல பூஜை அனுசரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ பகவதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்ற நிலையில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக அன்னதானம் பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் இவ் விழாவிற்கு நன்கொடை வழங்கிய முக்கியஸ்தர்களுக்கு ம், அறங்காவலர்களுக்கும், பேரூராட்சி தலைவர் செயல் அலுவலர் மற்றும் அலுவலர்களுக்கு பொன்னாடைகள் போர்த்தி கௌரவிக்கப்பட்டனர் . இவ்விழாவில் அறங்காவலர்கள் ஆறுமுகம், இரத்தினம் , பால்ராஜ் நாட்டாமைகள் நாகராஜன், முனியாண்டி பூசாரிகள் அழகேசன், கோபால், அய்யாவு (ஊர் குடும்பர்), ரங்கசாமி (ஊர் வாரியன்), பொன்ராம் (காணிக்கர்) மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், முன்னாள் கோவில் அறங்காவலர்கள், நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் என அனைவரும் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ சின்ன பகவதி அம்மனை வணங்கி சென்றனர்.
Leave a Reply