தக்காளிக்கு உரிய விலை இல்லாததால் குப்பையில் கொட்டி விட்டு சென்ற விவசாயிகள்

தக்காளிக்கு உரிய விலை இல்லாததால் குப்பையில் கொட்டி விட்டு சென்ற விவசாயிகள்

 

தமிழகத்தில் தக்காளி உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பது கோவை மாவட்டம் .குறிப்பாக கிணத்துக்கடவு .பொள்ளாச்சி .போன்ற பகுதி ஆகும். குறிப்பாக கிணத்துக்கடவு தக்காளி மார்க்கெட்டில் பெருமளவிலான வியாபாரிகள் வந்து சந்தை வியாபாரிகளிடமிருந்து தக்காளிகளை விலைக்கு வாங்கி கேரளா .கர்நாடகா .ஆந்திரா .மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தக்காளியினை வியாபாரிகள் அனுப்பி வருவது வழக்கம்.

 

கடந்த சில மாதங்களாக தக்காளி ஒரு பெட்டி 15 கிலோ அளவு கொண்டவை ரூபாய் ஆயிரம் வரை விற்பனையானது. இன்று இந்த ஒரு பெட்டியின் விலை 50 ரூபாய்க்கு கீழ் சென்றது மேலும் இன்று கிணத்துக்கடவு மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வராததால் 50 ரூபாய்க்கும் தக்காளி விற்பனையாகாமல் அப்படியே கிடப்பில் கிடந்தது. இதனால் கவலையடைந்த விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த தக்காளியினை குப்பையில் கொட்டிவிட்டுச் சென்றனர். மேலும் அவர்கள் கூறியதாவது ஒரு ஏக்கர் தக்காளி நடவு செய்வதற்கு ரூபாய் 75 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்றும் சரியான விலைக்கு தக்காளி விற்பனை ஆகாததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் இதனைத் தமிழக அரசாங்கம் தக்காளிக்கு உரிய விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் தகவல் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் தக்காளியை விவசாயிகள் குப்பையில் கொட்டி சென்றதால் கிணத்துக்கடவு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.