தமிழ்நாடு என்பது வெறும் வார்த்தையல்ல… ரத்தமும், சதையும் கொண்ட உரிமை போராட்டம்-முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

சென்னை: தமிழ்நாடு என்பது வெறும் வார்த்தையல்ல, ரத்தமும், சதையும் கொண்ட உரிமை போராட்டம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் மொத்த வரிவாருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 சதவீதம் என பெருமிதம் தெரிவித்தார். திமுக ஆட்சியில்தான் தெற்கு சிறக்கிறது என்ற பெருமையை தேடித்தந்துள்ளோம். தமிழ், தமிழன் என்ற உணர்வை ஏற்படுத்திய இயக்கம் திராவிட இயக்கம் என முதலமைச்சர் கூறினார்.