இருகூரில் கல்லால் தாக்கி டிரைவர் படுகொலை – பூசாரி கைது..!

இருகூரில் கல்லால் தாக்கி டிரைவர் படுகொலை. பூசாரி கைது…

கோவை அருகே உள்ள இருகூரை சேர்ந்தவர் சோம்நாத் ( வயது 22) டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் இன்று காலையில் அந்தப் பகுதியில் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் நேற்று இரவு சோம்நாத்தின் தந்தை மற்றும் அங்குள்ள ஒரு கோவில் பூசாரி மதன் ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்தார்களாம். குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பூசாரி மதனை சிங்கநல்லூர் போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் தனக்கு சாமி அருள் வந்து சோம்நாத்தை கல்லால் தாக்கி கொலை செய்ததாக கூறினார். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்..