கனமழை எச்சரிக்கை… குடியரசுத் தலைவர் நிகழ்ச்சி ரத்து – ஊட்டியில் இருந்து கோவை வழியாக டெல்லி புறப்பட்டார் திரௌபதி முர்மு.!!

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொள்வதாக இருந்தது. இதற்காக அவர் ஊட்டியில் கடந்த 2 நாட்களாக தங்கி இருந்தார். வெலிங்டனில் ராணுவ அதிகாரியுடன் கலந்து உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். கனமழை காரணமாக திருவாரூர் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வது ரத்து செய்யப்பட்டது. .பட்டமளிப்பு விழா வழக்கம் போல நடந்தது. ஜனாதிபதி ஊட்டியில் இருந்து கார் மூலம் கோவை வந்து விமான மூலம் இன்று மதியம் , 12 – 15 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். அவரை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வழி அனுப்பி வைத்தனர். இதையொட்டி ஊட்டியில் இருந்து கோவை வரை வழி நெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது..