கோவை சரவணம்பட்டி பாத்திமா நகரை சேர்ந்தவர் செந்தில் நாயகம் (வயது 60) இவர் நேற்று வெள்ளைக் கிணறு – சரவணம்பட்டி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் இவரது பைக் மீது மோதியது. இதில் செந்தில் நாயகம் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்துநெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த சரக்கு லாரி டிரைவர் சடகோபன் (வயது 46) மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
இதே போல உப்பிலிபாளையம், வரதராஜபுரம், தாமரை மில் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 58) இவர் நேற்று சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் நடந்து சென்றார் .பஸ் நிலையம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் இவர் மீது மோதியது .இதில் சீனிவாசன் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வுபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..