தீபாவளி பண்டிகை… கோவையில் 3500 போலீசார் குவிப்பு – போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி.!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-தீபாவளி பண்டிகை நெருங்குவதால் கடைவீதி பகுதிகளில் கூட்டம்அலைமோதுகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலும், திருட்டு வழிப்பறி போன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வகையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கோவை டவுன்ஹால் காந்திபுரம் கிராஸ்கட் ரோடு ,ஆர் எஸ் புரம் போன்ற பகுதிகளில் உயர் கோபுரம் (டவர்) அமைத்து அதில் நின்று போலீசார் பைனாக்குலர் மூலம் குற்ற செயல்களை கண்காணித்து வருகிறார்கள்.தீபாவளி பண்டிகைக்கு முன் 3 நாட்கள் நள்ளிரவு வரை கடைகளை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. .கடைகளிலும், கூட்ட நெரிசலிலும் மாறுவேடத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.கூட்டத்தில் பெண்களை கேலி – கிண்டல் செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்.அனுமதி பெறாமல் பட்டாசு கடை நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மாநகரில் தீபாவளி பண்டிகை ஒட்டி பாதுகாப்பு பணியில் 3500 போலீசார்இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.பொதுமக்கள் கூட்ட நெரிசலில் தங்களது உடைமைகளையும், பணத்தையும் கவனமாக கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவர் அவர் கூறினார்.